Wednesday, 6 July 2016

மதுரையைச் சேர்ந்த ராஜாராமன் சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் நுட்ப ஆய்வளராக பணியாற்றுகிறார். இவர் கனடா நாட்டின் தமிழ் இலக்யத்தோட்ட அமைப்பு சார்பில் வழங்கும், ‘சர்வதேச தொழில்நுட்பட வல்லுனர்’ என்ற விருதை வழங்கியுள்ளது. இந்த விருதை வாங்கும் முதல் தமிழக இளைஞன் ஆவார்.

இவ்விருது பெற்ற ராஜாராமன் கூறுகையில், ‘தமிழை பிழையின்றி எழுதவேண்டி 3 ஆண்டுகளுக்கு முன் நாவி என்ற சந்திப்பிழைத் திருத்தியை உருவாக்கி, எனது இணையதள வலைப்பூவில் அனைவரும் இலவசமாக பயன்படுத்த வெளியிட்டேன். இப்போது வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியை உறுவாக்கியுள்ளேன். முதன்முதலில் தமிழ் பிழை திருத்தியை உருவாக்கியிருந்தாலும், பலரது முயற்சியால்தான் வெற்றி பெற்றிருக்கிறது. எனக்கு இந்த விருதுடன் கிடைத்த ரொக்கத்தை ஹார்வேர்ட் பல்கலையில் துவங்கவிருக்கும் இருக்கைக்கு வழங்கியுள்ளேன்’ என்
றார்.

No comments:

Post a Comment